Thursday, January 20, 2011

முத்தான முழுநிலவு




முத்தான முழுநிலவைக்காட்டி எனைத்
தாலாட்டித் தூங்கவைத்துக் கொண்டிருந்தாள் எனது தாய்.
கண்கள் செருகியது, சுகமான தென்றல் கட்டித் தழுவியது.
அந்த நொடி அத்தாலாட்டும் நின்றுபோனது
கணங்களைத் திறந்து பார்த்தபொழுது
தாயும் இல்லை அவள் தாலாட்டும் இல்லை
அப்பொழுது
ரயில் தன் நிலையத்தை வந்தடைந்திருந்தது.
ஜன்னலின் வழியே எட்டிப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது
முத்தான முழுநிலவு ...


Tuesday, December 7, 2010

பேரண்டம் ( Parallel Universe )



ஓர் பெரிய பாலைவனத்தை நடந்தே கடக்க துடிக்கும் எறும்பை போல
இப்பேரண்டத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கும் சிறு மனிதர்கள் ...
ஓர் விஞ்ஞானியின் வேடிக்கை ...
பேரண்டம் ஒன்றல்ல இரண்டு என்றார் ...
இன்னும் ஒரு அண்டம் என்றால் இன்னும் ஒரு சூரியன்,
இன்னும் ஒரு சூரியன் என்றால் இன்னும் ஒரு சந்திரன்
இன்னும் ஒரு சந்திரன் என்றால், இன்னும் ஒரு வான்,
இப்படி இன்னும் சில கேள்விகளை தொடுத்து கொண்டே இருந்தால்
கடைசியில் அது தொட்டு நிற்கும் இடம் ... இன்னும் ஒரு நானா ???
இரு பூமி என்றால் அதில் இருக்கும் பொதுவான பல விஷயம் ...
அப்படியென்றால் நன்மையும் நேர்மையும் உண்மையும் வன்மையும் அதற்கும் சமமா ??
போதுமடா சாமி ...
சாமி என்றவுடன் தான் நினைவுக்கு வருகிறது,
கடவுள் யார் என்ற கேள்விக்கே முழு விடை கிடைக்கவில்லை
கடவுள் அவனா அவளா அதுவா என்றும் புரியவில்லை
இதை பற்றி வாதாட விரும்பாத சிலர்
கடவுள் ஒன்றே என சொல்லி குழப்பத்தை முடிப்பதிலேயே குறியாய் இருக்கின்றனர் ...
அந்த வாதாட விரும்பா குழுவில் நானும் ஒருவன் ...
அதனால் இந்த குழப்பத்திற்கு ஒரு முடிவு கட்ட
கடவுளும் அண்டமும் ஒன்றே என கண்மூடித்தனமாய் நம்புவோமாக !!!

சிறைக்கைதி ...




மேகத்தில் கம்பி முளைத்தது ...
சிறைக்கைதிக்கு !!!

என்னவளுக்காக ...



நிலவின் வெண்மை கடற்கரையினிலும் அலையினிலும் பரவிருக்கின்ற இந்த வேளை ... அலையை ரசித்தபடி நான் மட்டும் கரையில்
அன்று நீயும் நானும் இதே கடற்கரையில் உட்கார்ந்திருந்தோம்
நீ எனது தோளில் சாய்ந்துகொண்டு அழுதபொழுது விழுந்த கண்ணீரின் ஈரம்
காய்வதற்குள் என்னை விட்டு எங்கு சென்றாய் ?
தினமும் நான் உன்னை இந்த கடற்கரையில் தேடுகிறேன் ...
அலைகளிலும் முடிவில்லா வானிலும் நீ மறைந்திருப்பது எனக்கு தெரியும்
என் கண்ணீரின் மூலமாக நீ என்னை பார்த்துவிட்டு செல்வதும் எனக்கு தெரியும்
ஆனால் நான் உன்னை எங்கு பார்க்கிறேன் என்று உனக்கு தெரியுமா ?
நீ இந்த உலகிற்கு கொடுத்துவிட்டு சென்ற கண்களால் உன்னை பார்கிறேன்
நீ கொடுத்து விட்டு சென்ற இதயத்தோடு சேர்ந்து நானும் துடிக்கிறேன் ...
ஒரு நாள் நீயும் நானும் சேர்ந்து சந்தோஷத்தின் எல்லையை தொடுவோம்
இவ்வுலகத்தில் இல்லையென்றாலும் எங்கேயாவது தொலைதூரத்தில் ...
அதுவரை இந்த நிலவின் மூலமாகவும்
அலையின் மூலமாகவும் உன்னை தினமும் பார்த்துக்கொண்டே இருப்பேன்
நீயும் என் கண்ணீர் முலமாக என்னை வந்து பார் ...

என்ன இல்லை இந்த உலகத்தில் ???



கடலுண்டு வானுண்டு
நீல நிறமுண்டு
நிலவுண்டு வெளிர் நிறமுண்டு
பச்சை புல்வேளியுண்டு
சமவேளியுண்டு
நஞ்சையுண்டு புஞ்சையுண்டு
மழையுண்டு சாரலுண்டு
அருவியுண்டு
நீரின் ச்பரிசமுண்டு
மலைகளுண்டு குன்றுகளுண்டு
மாந்தர்களுண்டு
மனிதமுண்டு
குழந்தைகளுண்டு
கள்ளமில்லா சிரிப்புண்டு
பெண்களுண்டு நாணமுண்டு
ஆண்களுண்டு வீரமுண்டு
கல்லுரியுண்டு இளமையுண்டு
நூலகமுண்டு நல்லரிவுண்டு
பெரியவர்களுண்டு அனுபவமுண்டு
இவ்வளவு அழகான பக்கங்களுடைய இந்த உலகத்தில்
சில அழுக்கு பக்கங்களும் உள்ளன
அதில் வன்முரையுண்டு
பாவமுண்டு குற்றமுண்டு
எழ்மையுண்டு பசியுண்டு
சுயநலமுண்டு மனித மிருகங்களுமுண்டு ...

இயற்கை அன்னைக்கு ஒரு கடிதம்






இன்று ... இந்த நிமிடம் ... இந்த நொடி ...
நான் இறந்துவிட்டாலும் கவலையில்லை.
இப்பொழுது நான் ஒரு உயரமான மலையுச்சியிலிருந்து எழுதுகிறேன்
எனை சுற்றிலும் மலை காடுகள் ,
இந்த அதிகாலை வேளையில் பள்ளத்தாக்கினுடே
சுதந்திரமாய் பறந்து செல்கின்றன பறவைகள் ,
சூரியன் மெல்ல எட்டி எனை பார்த்து சிரிக்கின்றான்.
கொள்ளையடித்து செல்லும் தென்றல்
எனை கட்டித் தழுவுகின்றது .
ஆஹா !!!
இந்த நிமிடம் ... இந்த நொடி
நான் இறந்துவிட்டாலும் கவலையில்லை
இயற்கை அன்னையே
உன் மடியில் நான் ஒரு குழந்தையாய்
மலையும் காடும்
வயலும் சமவெளியும்
பறவையும் வானும்
கடலும் அருவியும்
ஆறும் ஏரியும்
வற்றா நதிக்கரையும்
நிலவும் தென்றலும்
கதிரவனும் வண்ணமும்
மரமும் காற்றும்
மழையும் சாரலும்
இப்படி எல்லாமுமாய்
நீ எங்களுடன் கலந்திருக்கிறாய்
ஆனால் முளையற்ற மாந்தர்கள் நாங்கள்
உன்னை அணுஅணுவாய் கொல்கிறோம்
டிஸ்கோ தேக்கும் பெண்களும் தான் வாழ்க்கை எனும் இளைஞர்கள்
பாதையில்லா மலையில் பயணிக்க வேண்டும்
வேலை வேலை என்று அடித்துகொள்ளும் வியாபார புள்ளிகள்
மறைந்திருக்கும் தனியான ஏரியில் குளிக்க வேண்டும்
இப்படியே இங்கு உட்கார்ந்து கொண்டு
வாழ்க்கை முழுக்க எழுத வேண்டும்
என்ற விருப்பம் எனக்கு
அனால் நானும் மானிட மாயை உலகில் விழ வேண்டும்
பேருந்து, புகை , நெரிசல் சாலை என்று திரும்ப வேண்டும்
என்றும் நீ என்னோடு இருப்பாய் என்று நம்பி
உன்னை விட்டு பிரிய மனதில்லாமல் பிரியும்
என்றும் தூய்மையான அன்புடன்
உனது மகன்

- கார்த்திக் -

இந்த கால இளைஞர்கள் ...




ஆர்ப்பாட்டமான காலை வேளையில் ...
வேர்த்து விறுவிறுத்த படி பேருந்தினுள் ஏறினேன் ...
என் ஐம்பது வயது உடம்புக்கு எதை பார்த்தாலும் எரிச்சல்
அதுவும் ...
காலியாக இருந்த பேருந்தில் உள்ளே ஏறாமல்
படியில் தொங்கிகொண்டிருக்கும் இந்த கால இளைஞர்களை பார்த்து ...
அதை பார்த்தும் ரசித்தும் வருகிற இளம் பெண்களை பார்த்து ...
அந்த காலத்தில் நாங்கள் எவ்வளவு ஒழுக்கமாக ...
ஆசைகள் இருந்தாலும் மனதிற்குள் பூட்டி வைத்துக்கொண்டு ...
இந்த காலத்து இளைஞர்களை சுத்தமாக பிடிக்கவில்லை ...
நினைத்துக்கொண்டே இருக்கும்போது கர்பிணி ஒருத்தி கீழே விழுந்தாள் ...
எனகென்ன என்றிருந்தேன் நான் ...
படியில் தொங்கிகொண்டிருந்தவர்கள் பதறியடித்து ஓடி வந்து ...
அவளை தாங்கி பிடித்தார்கள் ...
அந்த காலத்தில் இதே பேருந்து பயணத்தில் மிக ஒழுக்கமாக இருந்த நான் ...
இதை மட்டும் செய்ததில்லை