
நிலவின் வெண்மை கடற்கரையினிலும் அலையினிலும் பரவிருக்கின்ற இந்த வேளை ... அலையை ரசித்தபடி நான் மட்டும் கரையில்
அன்று நீயும் நானும் இதே கடற்கரையில் உட்கார்ந்திருந்தோம்
நீ எனது தோளில் சாய்ந்துகொண்டு அழுதபொழுது விழுந்த கண்ணீரின் ஈரம்
காய்வதற்குள் என்னை விட்டு எங்கு சென்றாய் ?
தினமும் நான் உன்னை இந்த கடற்கரையில் தேடுகிறேன் ...
அலைகளிலும் முடிவில்லா வானிலும் நீ மறைந்திருப்பது எனக்கு தெரியும்
என் கண்ணீரின் மூலமாக நீ என்னை பார்த்துவிட்டு செல்வதும் எனக்கு தெரியும்
ஆனால் நான் உன்னை எங்கு பார்க்கிறேன் என்று உனக்கு தெரியுமா ?
நீ இந்த உலகிற்கு கொடுத்துவிட்டு சென்ற கண்களால் உன்னை பார்கிறேன்
நீ கொடுத்து விட்டு சென்ற இதயத்தோடு சேர்ந்து நானும் துடிக்கிறேன் ...
ஒரு நாள் நீயும் நானும் சேர்ந்து சந்தோஷத்தின் எல்லையை தொடுவோம்
இவ்வுலகத்தில் இல்லையென்றாலும் எங்கேயாவது தொலைதூரத்தில் ...
அதுவரை இந்த நிலவின் மூலமாகவும்
அலையின் மூலமாகவும் உன்னை தினமும் பார்த்துக்கொண்டே இருப்பேன்
நீயும் என் கண்ணீர் முலமாக என்னை வந்து பார் ...
No comments:
Post a Comment